Relax

Earn from your Facebook

Quick Click Commissions

7/26/2010

குற்றம் செய்யாதக் குற்றவாளிகள்

யார்? நாம்தான், நுகர்வோர்கள்.
எல்லா ஊர்களிலும் உள்ள மின்சார வாரியங்களின் குளறுபடிகளும், ஒழுங்கீணங்களும், நுகர்வோரைக் கஷ்டப் படுத்துவதும் வரவர அதிகமாகிக் கொண்டேப் போகிறது.
முன் அறிவிப்பின்றி எந்த நேரத்திலும் எவ்வளவு நேரமானாலும் காரணமின்றி மின்தடை செய்கிறார்கள்.
மின்சார வாரியத்தின் குளறுபடிகளால் பாதிக்கப்படுபவர்கள்,
குற்றம் செய்யாக் குற்றவாளிகளான நுகர்வோர்கள்.
வாரிய ஊழியர்கள் அவரவர்களின் அன்றாட வேலைகளை மனசாட்சியுடன், வாங்கும் சம்பளத்துக்கு சரியாக அப்பப்போது வேலை செய்திருந்தால் இப்படி நடக்குமா?
மின்சார வாரியத்தின் குளறுபடிகளால் பாதிக்கப்படுபவர்கள்,
குற்றம் செய்யாக் குற்றவாளிகளான நுகர்வோர்கள்.
மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட நாட்களில் ஒவ்வொரு வீட்டிலும்
‘மீட்டர் ரீடிங்’ எடுத்து பில் கொடுக்க வேண்டியது அவர்கள் கடமை.
யாரோ ஒரு சோம்பேறி வருவான், சில வீடுகளுக்கு மட்டும் செல்வான், சில வீடுகள் திறந்திருந்தும்கூட, பூட்டியிருக்கிறது என்றுக் குறிப்பிட்டு, தற்சமய ‘ரீடிங்கைக்’ குறிப்பிடாமல், எந்த ஆதாரமும் இல்லாமல், தனக்குத் தோன்றிய ஏதோ ஒரு எண்ணை எழுதி இவ்வளவு தொகை கட்ட வேண்டுமென்றுக் குறிப்பிட்டு, பில்லைப் போட்டுவிட்டுப் போய்விடுவான்.
மின்சார வாரியத்தின் குளறுபடிகளால் பாதிக்கப்படுபவர்கள்,
குற்றம் செய்யாக் குற்றவாளிகளான நுகர்வோர்கள்.
இப்படிப் பல பில்கள் என்னிடம் இருக்கின்றன. இதைப் படிப்பவர்களில் பலப் பேருக்கு இப்படி நடந்திருக்கும் நிச்சயம். 
மின்சார வாரியத்தின் குளறுபடிகளால் பாதிக்கப்படுபவர்கள்,
குற்றம் செய்யாக் குற்றவாளிகளான நுகர்வோர்கள்.
எனக்கு மாதாமாதம் சராசரியாக ரூபாய் நூறிலிருந்து ரூபாய் இருனூறு வரை மின்சார பில் வரும். இம்மாதம் மேலேக் குறிப்பிட்டப்படி, ஒரு சோம்பேறி ‘ரீடிங்’ எடுக்காமல் ரூபாய் ஏழாயிரம்+ என்றுக் குறிப்பிட்டு பில் போட்டுவிட்டுப் போயிருக்கிறான். ஒரு சாதாரணக் குடியிருப்புக்கு ரூ.7000.00 மாதத்திற்கு ஆகுமா? என்றுக்கூட யோசிக்காமல், எந்த ஆதாரமோ, அத்தாட்சியோ, அடிப்படையோ, ரீடிங்கோ இல்லாமல் இப்படி எழுதலாமா? இதை கட்டுவதா வேண்டாமா?
மின்சார வாரியத்தின் குளறுபடிகளால் பாதிக்கப்படுபவர்கள்,
குற்றம் செய்யாக் குற்றவாளிகளான நுகர்வோர்கள்.
சாதாரணமாக மின்சார பில் வந்தால் வீட்டிலுள்ள யாராவது நேரம் கிடைக்கும்போதுக் கட்டிவிட்டு வருவோம். ‘வீடு பூட்டியிருக்கிறது’ என்றுக் குறிப்பிட்டிருந்தால், ஜே.இ ஆபிஸ் போக வேண்டுமாம், பின் 

ஏ.இ. ஆபீஸ் போக வேண்டுமாம், பின் மெயின் ஆபீஸ் போக வேண்டுமாம். இதற்கு ஒருநாள் விடுமுறை எடுக்க வேண்டும்.
மின்சார வாரியத்தின் குளறுபடிகளால் பாதிக்கப்படுபவர்கள்,
குற்றம் செய்யாக் குற்றவாளிகளான நுகர்வோர்கள்.
சில மாதங்களுக்கு முன் எனக்கு ஒரு மாத மின்சார பில் வந்தது. எவ்வளவு ரூபாய் என்று நினைக்கிறீகள்?
ருபாய் 17000.00+
நம்பமுடிகிறதா? நடந்ததுதான். இதை எடுத்துக்கொண்டுப் பல ஆபீஸ்கள் சென்றபின் சில கண்டுபிடிக்கப் பட்டன.
அதேபோல் ‘ரீடிங்’ எடுத்த ஒரு சோம்பேறி, நான்கு இலக்கம் கொண்ட முந்தைய மாத ‘ரீடிங்’க்குப்பின் மூன்று இலக்கங்களை இந்த மாத பில்லில் எழுதியிருக்கிறான். அதைக் கணணியில் இட்டபின், அந்த உண்மையுள்ள கணணி, மீட்டரின் முழு 10000 யூனிட்டுகளோடு, இந்த மூன்று இலக்க யூனிட்டுகளையும் கூட்டிக் கணக்குப் போட்டு, ரூ.17000.00+ என்றுக் கூறியிருக்கிறது. எந்த அலுவலரோ பொறியாளரோ சிறிதுகூட சரிபார்க்காமல் இந்த நம்பமுடியாத பில்லைக் கட்டச்சொல்லி அனுப்பியது.
மின்சார வாரியத்தின் குளறுபடிகளால் பாதிக்கப்படுபவர்கள்,
குற்றம் செய்யாக் குற்றவாளிகளான நுகர்வோர்கள்.
மின்சாரக் கட்டுபாட்டிற்காக சில நாட்களில் சிலமணி நேரங்கள் மின்தடை செய்கிறார்கள். சரி, பல நாட்களில் பல தெரு விளக்குகள் பகல்
‘பத்து மணிவரை’ எரிகிறதே அது எந்த மின்சாரம்?
மின்சார வாரியத்தின் குளறுபடிகளால் பாதிக்கப்படுபவர்கள்,
குற்றம் செய்யாக் குற்றவாளிகளான நுகர்வோர்கள்.
அதிருக்கட்டும், மின்சார வாரியத்தில் O&M, ‘ஓஅண்ட்எம்’ என்று ஒரு பகுதியில் ‘பராமரிப்பு’ என்ற செக்ஷனில் பராமரிப்பு என்றால் என்ன என்றுக்கூட அர்த்தம் தெரியாதவர்கள் வேலை செய்கிறார்கள். பல தெருக்களில் இரவு விளக்குகள், தெரு சந்திப்பு விளக்குகள், தலைவர்கள் சிலைமுன் விளக்குகள், காந்திசிலை அருகில்கூட விளக்குகள், ஆழமாக சாலையோரம் வெட்டியப் பள்ளங்கள் பக்கம் விளக்குகள் எல்லாம் பல மாதங்களாக எரிவதில்லை, இதுதான் ‘பராமரிப்பா?’
மின்சார வாரியத்தின் குளறுபடிகளில் பாதிக்கப்படுபவர்கள்,
குற்றம் செய்யாக் குற்றவாளிகளான நுகர்வோர்கள்.
ஒரே ஒரு துளி மழை சொட்டினால், உடனே மின்சாரம் தடைபடும். ஏன்? இது என்ன சிஸ்டம்? என்ன மின்சாரப் பொறியியல்? ஒரு துளி மழை பெய்தால் கட்டிடம் இடிந்துவிடும் என்று கட்டிடப் பொறியாளர் சொன்னால் ஒத்துக் கொள்வார்களா?      
மின்சார வாரியத்தின் குளறுபடிகளால் பாதிக்கப்படுபவர்கள்,
குற்றம் செய்யாக் குற்றவாளிகளான நுகர்வோர்கள்.
பல அலுவலகங்களில் அலுவலர்கள், முதல் தேதி சம்பளம் வாங்குவதற்கும், மற்ற எல்லா நாட்களும் கிம்பளம் வாங்க மட்டும்தான் அலுவலகம் செல்கிறார்கள், தங்கள் வேலையை செய்ய அல்ல.
மின்சார வாரியத்தின் குளறுபடிகளால் பாதிக்கப்படுபவர்கள்,
குற்றம் செய்யாக் குற்றவாளிகளான நுகர்வோர்கள்.

பாப்ரட்ரிக்