Relax

Earn from your Facebook

Quick Click Commissions

6/23/2010

செம்மொழித் தமிழுக்கு இழுக்கா?


செம்மொழித் தமிழுக்கு இழுக்கல்லவா? (பாப்ரட்ரிக்)
அழகாகவும் அழுத்தமாகவும் உச்சரிக்கவேண்டிய நம் இனியத் தமிழை இக்காலத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை எப்படியெல்லாம் தவறாக உச்சரிக்கிறார்கள் பாருங்கள்.
தவறாக எழுதுவதை ஏற்றுக்கொல்லாத அதே மக்கள் ஏப்படி உச்சரிக்கிறார்கள் என்றுக் கவனியுங்கள்.
மிக அலட்சியமாக ல, ள, ழ எல்லாவற்றையுமே ஒரே ‘ல’கரமாகவேப் பலர் பொது இடங்களில் பேசிவருகிறார்கள்.
இது செம்மொழித் தமிழுக்கு இழுக்கல்லவா?

நல்லத் தமிழர்கள் யாராவது இதை ஏற்றுக் கொள்வார்களா?
அவர்கள் எப்படியெல்லாம் உச்சரிக்கிறார்களோ அப்படியே அவர்கள் தமிழில் இப்படி எழுதிக் கொடுத்தால் எப்படி இருக்கும் படியுங்கள். எலுதியது தவரு என்பார்கல் அவர்கல்.
“பெரியோர்கலெ தாய்மார்கலே, நான் எனக்காக வால்வதிள்ளை, டமிலுக்காகவும் ஒங்கலுக்காக்கவும்தான் வால்கிரேன். என்ன ஆத்ர்ச்சி ஏட்ருகொல்ல வேண்டும். டமில்தான் என் மூச்சி, மக்கல்தான் என் உயிர். டமில் வால்க, மக்கல் வளர்க. ஒன்ட்ரு, ரன்டு, மூன்ட்ரு என்ட்ரு சொல்ரதர்க்கு முன்னே உங்ககிட்டே வர்வேன். என்ன நீங்க ஆதரிக்க மன்ட்ராடுகின்ட்ரேன். வேரோன்ட்ரும் இள்ளை. அள்ளேளூயா”

உச்சரிப்புக்களை மாற்றி மாற்றி உச்சரிப்பதுதான் இன்றைய நாகரீகமாம். மற்ற மொழிப் பேசுபவர்களும், மற்ற நாட்டில் பிறந்தவர்களும் பேசினால் தவறில்லை. தமிழ் நாட்டிலேயேப் பிறந்து, தமிழ் நாட்டில் கல்வி பயின்று, தமிழ் நாட்டிலேயேத் தவறாகப் பேசுவது மன்னிக்கவே முடியாத மாபெரும் குற்றம். தமிழுக்கு இழுக்கு!
நாங்கள் தமிழ் கற்றக் காலத்தில், தமிழாசிரியர்கள் எங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகத் தமிழ் உச்சரிப்புக்களைச் சொல்லித்தருவார்கள், பயிற்சியளிப்பார்கள், சரியாக உச்சரிக்கும்வரை விடமாட்டார்கள், வரவிட்டால் தண்டனையுண்டு. அப்படிப் படித்தினால்தான் இன்றும் சரியாக எங்களால் உச்சரிக்க முடிகிறது, மற்றவர்களின் தவறுகளும் தெரிகின்றன.
இப்போதிருக்கும் ஆசிரியர்கள் யாராவது தமிழ் உச்சரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து மாணவர்களுக்கு சொல்லித்தருகிரார்களா? இல்லை, ஏன்? இந்த ஆசிரியர்களுக்கே சரியாக உச்சரிக்கத் தெரியாமல், அவர்களுக்குத் தெரிந்த தப்பான உச்சரிப்புக்களை மாணவர்களுக்கு சொல்லித் தருகிறார்கள். அதனால் 90% மாணவர்கள் அப்படித் தப்பாகப் படித்து வெளிவந்தவர்கள் தான் இப்போது பாரெங்கும் உலவிவருகிறார்கள்.

அவர்களிடம் நல்ல உச்சரிப்பை எதிபார்ப்பது நம் முட்டாள்தனம்தான்.

தமிழுக்கு இழுக்கு!

ஆனால்

அப்படி அரைகுறையாகத் தவறானப் பள்ளியில் தப்பான ஆசிரியர்களிடம் தமிழ் கற்று வெளிவந்த முட்டாள்கள், அவரவர்கள் வீட்டிலும் தம் உறவினருடனும் தப்பானத் தமிழில் பேசிக்கொண்டிருக்கட்டுமே! பொது இடங்களுக்கும், மேடைகளுக்கும், ஒலிப்பெருக்கி மற்றும் ஒலிப்பதிவுக் கருவிகள் முன் வந்து நிற்க அவர்களுக்கு என்ன அறுகதை இருக்கிறது?
சில ஆசிரியர்கள் சரியாக சொல்லித்தந்தாலும் பலர் அதைத் தவறாகப் புரிந்துக்கொண்டுத் தப்பாக உச்சரிக்கிறார்கள். அழுத்தமான உச்சரிக்க வேண்டுமேன்பதற்காக இல்லை என்பதை இள்ளை என்று சொல்லாமா? ‘ற’ என்ற எழுத்தை ‘ட்ர’ என்று ஒளிப்பதுபோல் சொல்லுங்கள் என்றால் ஒன்ட்ரு, மூன்ட்ரு என்று சொல்கிறார்கள். ‘ஆறு’ என்பதை ‘ஆட்ரு’ என்பார்களா? சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பதுபோல் நாவிற்கு சற்றுப் பழக்கம் அளிக்க வேண்டும். நாவை சிறிது மடக்கக்கூட சோம்பேறித்தனம் பட்டு அலட்சியமாக உச்சரிப்பவர்களை நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. எச்சரிக்கவேண்டும்.
தமிழுக்கு இழுக்கு!

தவறாக உச்சரிப்பவர்களுக்கு சரியாக உச்சரிப்பவர்கள் நல்லப் பயிற்சியளிக்கலாம். அப்படியும் அவர்களுக்கு வரவில்லை என்றால் அவர்களை தயவு இன்றி ஒத்துக்கிவிட வேண்டும். மிக நன்றாக உச்சரிக்கக் கூடியவர்கள் பலர் இருக்கும்போது உச்சரிக்க முடியாதவர்களை ஏன் கட்டாயப்படுத்த வேண்டும்? தாங்கள் உச்சரிப்பது தவறா சரியா என்றுக்கூட அவர்களுக்குத் தெரிவதில்லை, பிறர் சொன்னாலும் கேட்பதில்லை. அவர்கள் தங்களின் பேச்சையோப் பாட்டையோ ஒளிப்பதிவு செய்து தாங்ககளேக் கேட்கவேண்டும், மற்றவர்களையும் கேட்கச்சொல்லி அவர்களின் அபிப்பிராயங்களை கவனமாகக் கேட்டுத் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும். எத்தனைப் பேர் அப்படி செய்கிறார்கள்?

வெட்கம்கெட்டு அரைகுறையாக வேளியேவந்த இந்த அறைவேக்காடுகளுக்கு எந்த விதமான
சோதனைகலையோ பயிற்சியோ அளிக்காமல் தேர்வுசெய்து ஒலி, ஒளிக் கருவிகள்முன் நிறுத்தும் ‘தமிழ்த் துரோக முட்டாள்கள்’ பலர் பல இடங்களில் இன்னும் இருக்கிறார்கள்.
நிறுத்தும் பொது இடங்கள்: மேடையேறிப் பேச, மேடை நாடகங்களில் நடிக்க, பாட்டுக் கச்சேரிகளில் பாட, வானொலியில் செய்திகள் வாசிக்க, அறிவிக்க, தொலைக்காட்சியில் செய்திகள் வாசிக்க. நாடகங்களில் நடிக்க, நிகழ்சிகள் நடத்த, பல அறிவிப்புகள் செய்ய, விளம்பரங்கள் செய்ய, தேவாலயங்களில் பாடல்கள் பாட, வாசகங்கள் வாசிக்க, ஜெபம் செய்ய, பூசைகள் செய்ய, இப்படிப் பல.
முட்டாள்களை அனுமதிப்பவர்களும் படுமுட்டாள்கள்தானே! தமிழுக்கு இழுக்கு!
தங்களின் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் உலகெங்கும் தெரிகிறது என்றும், இன்டர்நெட்டிலும் வருகிறது என்றுப் பெருமைப்பட்டுக் கொள்ளும் அதிமேதாவிகள், அதேசமயம் தாம் தரம் குறைந்த தப்பானத் தமிழ் உச்சரிப்புகளை உலகெங்கும் பரப்புகிறோம் என்பதை ஏன் உணர்வதில்லை? யார் உணர்த்துவது?
தமிழுக்கு இழுக்கு!
தப்பாக உச்சரிப்பவர்கள் பொது இடங்களுக்குத் தகுதியற்றவர்கள் என்றுத் தெரிந்தும்கூட அவர்களுக்கு வாய்ப்பளிகிறார்கள் என்றால், அந்த வாய்ப்பளிக்கும் முட்டாள்களுக்கு அந்த முட்டாள்கள் உறவினர்களாக இருக்க வேண்டும், தலைவர்களின் பில்ளைகளாயிருக்க வேண்டும், அதிக லஞ்சம் கொடுத்திருக்க வேண்டும், அவர்களை பயமுறுத்தியிருக்க வேண்டும், இதில் எதுவாக இருந்தாலும் தங்கள் சுயநலத்திற்காகத் தமிழை ஏன் கொலை செய்யவேண்டும்? தமிழுக்கு இழுக்கு!
தமிழே அறியாத மேலை நாட்டு அறிஞர்கள் வீரமாமுனிவர், ஜி.யூ.போப் போன்றப் பலர் தமிழ் நாட்டுக்கு வந்து, நம் தமிழைக் கற்று, பல ஆராய்ச்சிகள் செய்து, தமிழைத் திருத்தி, சரியான உச்சரிப்புக்களை சொல்லிக்கொடுத்துப் போனப் பிறகும்கூட, இப்படி இந்த முட்டாள்கள் தவறாக உச்சரிப்பது, அந்த மேதைகளை அவமானப்படுத்தி இழிவுப்படுத்துவது ஆகும். இப்படிப்பட்ட முட்டாள்களைத் துரத்தியடிக்க வேண்டும்.
செம்மொழித் தமிழுக்கே இழுக்கா?

நல்லப் பிழையில்லாத் தமிழை ஊடகங்கள் மூலம் இனிப் பார்க்கவோ கேட்கவோ முடியுமா? அதுவரை நான் உயிரோடிருப்பேனா? எனக்கு இப்போது வயது அறுபத்து ஆறு.
என்னுடைய எழுத்துக்களில் எதாவதுத் தவறுகள் இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.

டமில் வால்க! வலர்க!!
அவர்கல் கேப்பார்கல், டமிலுக்கு இலுக்கா? அப்டீன்னா?
தாங்கமுடியவில்லையே!
நல்லத் தமிழை வாழவையுங்கள்!
பாப்ரட்ரிக்