Relax

Earn from your Facebook

Quick Click Commissions

7/15/2010

யாருக்குப் பாராட்டு?

யாருடைய திறமைகளுக்கு, யாருக்குப் பாராட்டு?
யாரோ கண்விழித்துக் கற்பனை செய்து, எழுதியப் பாட்டுக்கு,
 யாரோ இரவுப்பகலாக இனிமையாக இசையமைத்தப் பாட்டுக்கு,
 யாரோ தாள-சுருதி சுத்தமாகப் பாடியப் பாட்டுக்கு,
யார் யாரோ பல இசைக்கருவிகளால் மெருகூட்டியப் பாட்டுக்கு,
 யாரோ அருமையாக ஒலிப்பதிவு செய்தப் பாட்டுக்கு,
யாரோ நடனமாடக் கற்றுத் தந்தப் பாட்டுக்கு,
யாரோ இயக்கிக் காட்சியமைத்தப் பாட்டுக்கு,
யாரோ ஒளிப்பதிவு செய்துப் படமாக்கியப் பாட்டுக்கு,
யாரோ! உதட்டசைத்துப் போலியாகப் பாடுவதுபோல் நடித்ததற்கு,
 யாரோ தான் கைகால்களைப் போலியாக ஆட்டியதற்குப் பாராட்டா?
யார் யாருடையத் திறமைகளுகோத் தனக்குப் பாராட்டு வருகிறது என்பது
யாவருக்கும் தெரியுமேன்பதுத் தெரிந்தும், தெரியாததுபோல் நடிக்கும் நடிகருக்கு,
யார் யாரோ போலியான அவருக்கு மட்டும் போலியாக கைதட்டுவதும்,
    யாரோ தலைமைதாங்கி, அந்தப் போலியைப் பாராட்டுவதும்,
யார் யாருடையத் திறமைகளையோ மறைத்து அந்தப் போலிக்குப் பரிசளிப்பதும்,
யாருக்குமே! இவைகள் போலி என்பதோ தவறு என்பதோத் தெரியவே இல்லையா?
யார் சொல்லி யார் கேட்கப் போகிறார்கள்! நயவஞ்சகம்!
யாரோவுடையத் திறமைகளைத் தனதாக்கிக் கொள்பவர்கள்தான் வாழ்கிறார்கள், வாழட்டும்.
யாரெல்லாம் மறைந்திருந்து அவர்களைத் தூக்கிவிடுகிறார்களோ! அவர்கள் தூங்கட்டும்.

பாப்ரட்ரிக்